புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகசியமாக வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடுகப்பட்டி கிராமத்தில் சிலர் வீடுகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையின் போது மாரிமுத்து மற்றும் சீனிவாசன் இருவரின் வீட்டில் மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.