புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உடையாளிப்பட்டி பகுதியில் வீட்டில் 4 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததற்காக ஆறுமுகம் அவரது மகன் சக்திவேல் மற்றும் கலியபெருமாள் அகிய 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து அறந்தாங்கியிலுள்ள கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க காவல் துறை சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த நகலை அறந்தாங்கி கிளை சிறையிலுள்ள 3 பேரிடமும் காவல் துறையினர் காண்பித்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.