Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. பெட்டிக்கடையில் மது விற்பனை… கைது செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்டிக்கடையில் வைத்து மது விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பாடி பகுதியில் துரையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள கடைவீதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் துரையரசன் பெட்டி கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி காவல் துறையினர் பெட்டிக்கடைக்கு சென்று சோதனை செய்த போது பெட்டிக் கடையின் பின்புறம் வைத்து மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர் மீது  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |