Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இது மினி டாஸ்மாக் மாதிரி இருக்கு… 4 லட்சம் மதிப்பு… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அண்ணாநகரிலுள்ள வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது அங்கு மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்ததை பார்த்து காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அது ஒரு மினி டாஸ்மாக் கடை போல் இருந்துள்ளது. இதனையடுத்து ஆறுமுகம், சக்திவேல் மற்றும் கலிய பெருமாள் ஆகிய 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்ததுடன் அங்கு பதுக்கி வைத்திருந்த 4 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |