Categories
அரசியல்

ஒயின், ஒன்னும் மது கிடையாது…. சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்க அனுமதித்த மராட்டிய அரசு…!!

மராட்டியத்தில், சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத், ஒயின், மதுபானம் கிடையாது, அதன் விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

மராட்டிய மாநிலம், ஒயின், மதுபானம் கிடையாது என்று கூறி பல்பொருள் அங்காடிகளில் அதனை விற்பனை செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது. இது தொடர்பில் ஆளும் கட்சி சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் தெரிவித்திருப்பதாவது, ஒயின், மதுபானம் கிடையாது.

அதன் விற்பனை அதிகரிக்கப்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைக்கும். அவர்களின் வருமானத்தை இருமடங்காக்குவதற்கு தான் இதனை செய்திருக்கிறோம். பல்பொருள் அங்காடிகளில் ஒயின் விற்பதை பா.ஜ.க எதிர்த்திருக்கிறது. ஆனால், அவர்கள் விவசாயிகளுக்காக ஒன்றும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்களுக்கு அருகே இருக்கும் பல்பொருள் அங்காடிகளில் மது விற்க அனுமதி இல்லை. மதுவிலக்கு நடைமுறையில் இருக்கும் மாவட்டங்களிலும் மது விற்பதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  இதனை பாஜக எதிர்த்துள்ளது. மதுவை, மராட்டிய அரசு ஊக்குவிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.

Categories

Tech |