உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியா சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார்.
இப்போட்டியில் இளவேனில் 250.8 புள்ளிகளை எடுத்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.250.7 புள்ளிகளை எடுத்த சீனாவின் யிங்-ஷின் லின் இரண்டாவது இடத்தையும், 229.0 புள்ளிகளை எடுத்த ரோமானியாவின் லாரா-ஜார்ஜெட்டா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.இதற்கு முன் இளவேனில் பிரேசலின் ரியோடிஜெனீரோ நகரில் நடைபெற்ற உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.