சீனாவில் ஒலிம்பிக் பனிச்சறுக்கு போட்டிக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகைமூட்டத்தை குறைக்க அரசாங்கம் போராடிக் கொண்டிருக்கிறது.
பீஜிங் நகரில் பனிச்சறுக்கு போட்டிக்காக செயற்கை முறையில் பனிப்பொழிவை உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு தண்ணீருக்கு தட்டுப்பாடு உண்டாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சீன அரசு, பசுமை ஒலிம்பிக் என்ற நோக்கத்திற்காகத் தான் இதில் களமிறங்கியது.
அதற்காக, குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்தும் ஏற்பாடுகளை கடந்த 2015 ஆம் வருடத்தில் ஆரம்பித்தது. அப்போது, அந்நகருக்கு அருகில் இருக்கும் ஹெபை மாகாணத்தின் தொழிற்சாலைகள் பிற இடங்களுக்கு மாற்றப்பட்டது. மேலும் அப்பகுதியில் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டது.
இருப்பினும், புகைமூட்டம் தற்போது அதிக அளவில் இருப்பதால், அதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. வரும் ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து, ஒலிம்பிக் பனிச்சறுக்கு போட்டி நிறைவடையும் வரை பீஜிங் மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகளை அடைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.