Categories
தேசிய செய்திகள் பல்சுவை

குளிர் கால கூட்டதொடர் இன்றுடன் முடிவு…… முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு மும்முரம்….!!

கடந்த 18ம் தேதி தொடங்கப்பட்ட நாடாளுமன்ற குளிர்கால தொடர் இன்றுடன் முடிவடைய உள்ளது. 

கடந்த  18ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால தொடரில் பல்வேறு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாக தேசிய பாதுகாப்பு மசோதா, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மசோதா, மற்றும் டெல்லியில் காலனிகளில் வசிக்கக்கூடிய உரிமையை பாதுகாக்கும் திருத்த மசோதா, உள்ளிட்ட  மசோதாக்கள் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மேலும் மசோதா மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில், மாநில ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர் கட்சிகள் எழுப்பினாலும் கூட அதற்கும் மத்திய அரசு சரியான விளக்கத்தை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொடுத்திருந்தார்கள். குறிப்பாக நதிநீர் பங்கீடு தொடர்பாக சரியான விளக்கம் மத்திய அரசின் சார்பாக  எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கப்பட்டது.

மேலும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. துறை ரீதியாக அதற்கான விளக்கங்களும் மத்திய அரசு அளித்து வருகிறது. கடைசி நாள் என்பதால் நிறைவேற்றப்படாத மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த கூட்டத்தொடரில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, முத்தலாக் தடை உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய அரசு, இம்முறை தேசிய குடியுரிமை சட்டம் உட்பட முக்கிய மசோதாக்களை  நிறைவேற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |