Categories
உலக செய்திகள்

சுவீடனில் அதிசயமான நிகழ்வு… பச்சை நிறத்தில் காணப்படும் வானம்…!!

ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகளுக்கு இடையில் ஸ்வீடன் அரோரா என்ற அதிசயமான வானியல் நிகழ்வு தோன்றியிருக்கிறது.

ஸ்வீடன் அரோரா என்ற அதிசயமான வானியல் நிகழ்வானது, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து  நாடுகளுக்கு இடையே இருக்கும் பஜாலா என்ற பகுதியில் தோன்றியிருக்கிறது. வானை இந்த அதிசய ஒளி அலங்கரிக்க செய்தது. வண்ணங்கள் நடமாடுவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மெய்சிலிர்க்க செய்திருக்கிறது.

இந்த சூரியனிலிருந்து மின்சாரத்தால் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள், பூமியினுடைய வளிமண்டலத்தில் மோதுகிறது. அந்த சமயத்தில் தோன்றக்கூடிய தனித்துவமிக்க இயற்கை நிகழ்வு தான் ஸ்வீடன் அரோரா. வடக்கு ஒளி, வானத்தில் பச்சை, ஊதா மற்றும் பிங்க் போன்ற நிறங்களில் கோடுகளாக காணப்படும்.

செப்டம்பர் மாதத்திருந்து மார்ச் மாதம் வரை இந்த நிகழ்வை சுவீடனில் பார்க்கலாம். மாலை 6 மணியிலிருந்து நள்ளிரவு 2 மணி வரைக்கு இந்த நிகழ்வை காண முடியும்.

Categories

Tech |