அஜித்தின் விவேகம் திரைப்படம் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் அஜீத் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ‘வலிமை’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக தயாராகி வரும் இப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படம் ஹிந்தியில் டப் செய்து வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த நிலையில் தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படமும் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்து இருப்பதையும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.