சாலை பணியை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஓவேலி அண்ணா நகர் கிராம பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தார்சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் இருந்துள்ளனர். இதனால் பொதுமக்களின் வேண்டுகோளின் படி அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியானது நடைபெற்றுள்ளது. ஆனால் சுமார் 150 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்ட பிறகு பணியினை பாதியிலேயே நிறுத்தி விட்டனர்.
இந்நிலையில் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் வரை இருக்கும் மண் சாலை மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அவ்வழியாக செல்வதற்கு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறும் போது, பாதியிலேயே நிறுத்திய சாலை பணியை முழுமையாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.