Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு எதுவும் கிடைக்கல…. இதை கண்டிப்பா புறக்கணிப்போம்… மலைவாழ் மக்களின் முடிவு….!!

மலைவாழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஈசல் தட்டு, கோடந்தூர், ஆட்டு மலை, குருமலை போன்ற மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு சுகாதாரம், மின்சாரம், கல்வி, சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. இந்நிலையில் பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மலைவாழ் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் இவர்களது கோரிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மலைவாழ் மக்கள் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தாங்கள் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருவதாகவும், உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை அதிகாரிகள் இதுவரை தங்களுக்கு பெற்று தராததால் அரசு அறிவிக்கும் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இங்கு வசிக்கும் மக்களின் நிலங்களுக்கு பட்டா வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு கூறிய இரண்டு கோரிக்கைகளை அதிகாரிகள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்காததால் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்துள்ளனர்.

Categories

Tech |