Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பயன்பாட்டிற்கு கொண்டு வாங்க” சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பு…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

படகு இல்லத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோலையாறு அணைக்கு செல்லும் சாலையில் வால்பாறை நகராட்சி நிர்வாகத்தினர் சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் படகு இல்லம் திறக்கப்படாமல் இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும் போது, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் குப்பைகள் தேங்கி கிடப்பதாகவும், படகுகள் பயன்பாடற்று கிடப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே படகு இல்லத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |