தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மன்மோகன் சிங்கின் பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும் என்று கூறி சந்திரபாபு நாயுடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மன்மோகன் சிங் தனது 87-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவரது பிறந்தநாளுக்கு மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், எங்கள் கெளரவ முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
Wishing a very Happy Birthday to our Hon. former PM Dr. #ManmohanSingh Ji. Your contribution to the economic growth of the nation will always be remembered. #HappyBirthdayDrSingh
— N Chandrababu Naidu (@ncbn) September 26, 2019