Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வீட்டை பூட்டிக்கொண்டு மாந்திரீகம்”…. அக்கம் பக்கத்தினர் புகார்…. “கதவை உடைத்து போலீஸ்காரர் உட்பட 6 பேர் மீட்பு”…!!!!!!!

ஆரணி அருகே வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மாந்திரீகம் செய்வதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கதவை உடைத்து போலீஸ்காரர் உட்பட ஆறு பேர் மீட்கப்பட்டார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சிக்குட்பட்ட தசரா பேட்டை கிராமத்தைச் சேர்ந்த தவமணி என்பவர் நெசவுத் தொழிலாளி. இவரின் மனைவி காமாட்சி. இவர்களுக்கு பூபாலன், பாலாஜி உள்ளிட்ட இரண்டு மகன்களும் கோமதி என்ற மகளும் இருக்கின்றார். கோமதியின் கணவர் அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆவார். இதில் பூபாலன் சென்னையில் உள்ள தாம்பரம் ஆயுதப் படை போலீஸில் வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் இவர்கள் 6 பேரும் சென்ற மூன்று நாட்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மாந்திரீகம் செய்வதாக சொல்லப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று காலை முதல் கதவை திறக்காமல் மந்திரம் ஓதும் சத்தம் வருவதாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வருவாய் துறைக்கும் காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்திருக்கின்றார்கள். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் வீட்டைச் சுற்றி குவிக்கப்பட்டார்கள். ஐந்து மணி நேரம் போராடியும் அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. அவர்களை வெளியே வருமாறு அழைத்த போது நாங்கள் மாந்திரீகம் செய்கின்றோம். நீங்கள் பூஜையை தடை செய்ய வேண்டாம். நீங்க வெளியே செல்லுங்கள் என குரல் மட்டும் வந்தது.

இதனால் தீயணைப்புத் துறையினர் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து முன்பக்க கதவை உடைத்தார்கள். அப்போது வெளியே வந்த அவர்கள் கோமதிக்கு பேய் பிடித்திருப்பதாகவும் அதனால் மாந்திரீகம் மூலம் அவருக்கு பேய் விரட்டும் பூஜை நடத்தி வருவதாகவும் இந்த பூஜையை கோமதியின் கணவர் பிரகாஷ் செய்வதாகவும் மேலும் நேற்று இரவு நரபலி கொடுக்க இருந்ததாகவும் கூறப்பட்டது. தீயணைப்பு துறையினரும் வீட்டில் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த பொம்மை உள்ளிட்ட பொருட்களை வெளியே கொண்டு வந்து தீயிட்டு கொளுத்தினார்கள். இதில் மீட்கப்பட்ட போலீஸ்காரர் உட்பட ஆறு பேரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இச்சம்பவத்தால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |