Categories
அரசியல் தேசிய செய்திகள்

105 MLA_க்களை வைத்து “பா.ஜ.க எப்படி பெரும்பான்மை நிருபிக்கும்” சித்தராமையா ட்வீட் ..!!

105 எம்.எல்.ஏ.க்களை கொண்டு ஆட்சி அமைக்கும் பா.ஜ.க எப்படி பெரும்பான்மையை நிருபிக்க முடியும்? என்று  சித்தராமையா ட்வீட் செய்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்  மற்றும் தசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தது. இதைத்தொடர்ந்து முதல்வர் குமாரசாமி தந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய அரசை அமைக்கும் முயற்சியில் எதிர் கட்சியாக இருந்த பாஜகவினர் முயற்சித்து வந்தனர்.

Image

இந்நிலையில் இன்று கர்நாடக மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு மனுவை அளித்ததோடு இன்று மாலை கர்நாடக மாநில முதல்வராக பதவி ஏற்க இருக்கின்றார். இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர்  சித்தராமையா தாது ட்வீட்_டர் பக்கத்தில் , 105 எம்.எல்.ஏ.க்களை கொண்டு ஆட்சி அமைக்கும் பா.ஜ.க எப்படி பெரும்பான்மையை நிருபிக்க முடியும்? என்று ட்வீட் செய்துள்ளார்.

Categories

Tech |