அமெரிக்காவைச் சேர்ந்த 2 பெண்கள் கல்யாணம் செய்துகொண்ட நிலையில், இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரித்து 3 நாட்கள் இடைவெளியில் குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த கரீனா ரின்கன் மற்றும் கெல்லில் மிஷா ஆகிய 2 அழகிய இளம் பெண்களும் பள்ளிப் பருவத்திலிருந்தே நெருங்கிய தோழியாக இருந்து வந்துள்ளனர்.. இந்த சூழலில் தான் இருவரும் ஒருவரையொருவர் பார்க்கமுடியாமல் பிரிந்து வெவ்வேறு திசைக்கு சென்று விட்டனர்.. இதையடுத்து 2013-ம் ஆண்டு மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்தனர்.. அதன் பின்னர் இவர்கள் இருவருக்குமிடையே காதல் மலர்ந்து விட்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டாருக்கும் காதலிப்பது தெரிந்து விட்ட நிலையில், இருவரும் கல்யாணம் செய்து கொண்டனர்.. அதனைத்தொடர்ந்து 2 பேரும் ஒரே நேரத்தில் கர்ப்பமடைய வேண்டும் என எண்ணினர்.. இதற்காக அவர்கள் நீண்ட நாட்கள் யோசனை செய்தனர்.. பின்னர் அவர்கள் இருவரும் ஆன்லைன் மூலம் 2 நபர்களின் உயிரணுக்களை வாங்கி தங்கள் உடலில் செலுத்தி கொண்டனர்.. இதன்மூலம் கரீனா மற்றும் கெல்லில் ஆகிய 2 பேருமே ஒரே நேரத்தில் கர்ப்பம் அடைந்து விட்டனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் கெல்லில் என்பவர் முதலில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.. அந்த ஆண் குழந்தை ஆரோக்கியமாக 2.72 எடையுடன் இருந்தது. அதன் தொடர்ச்சியாக அடுத்த 3 நாட்களிலேயே கரீனா பிரசவ வலியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.. அந்த குழந்தை 3 கிலோ எடை கொண்டதாக இருந்தது. 2 அழகிய குழந்தைகளுக்கும் லியோ மற்றும் சோபி என பெயர் வைத்து, ஆரோக்கியமாக வளர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து கரீனா என்பவர் கூறுகையில், கெல்லில் முதலில் ஆண் நண்பர்கள் பற்றி தான் பேசுவார்.. அது எனக்கு ரொம்ப பொறாமையாக இருந்தது.. பின்னர் நான் என்னுடைய காதலை அவரிடம் சொன்னேன்.. அவரும் அதை புரிந்துகொண்டு ஓகே சொன்னார்.. ஆனால் எங்களது கல்யாணத்துக்கு இருவரின் குடும்பமும் ஒத்துக் கொள்ளவே இல்லை.. மற்ற ஜோடிகளுக்கு எங்களது ஆலோசனை என்னவென்றால், எதையும் சிந்தித்து செய்யுங்கள். அதே நேரத்தில் நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.