தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமானவர் பார்வதி நாயர். இவர் வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக வேலை பார்த்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் தன் வீட்டில் இருந்த 10 லட்சம் மதிப்புள்ள ரெண்டு வாட்ச்சுகள் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள லேப்டாப் இரண்டு செல்போன்களை திருடிவிட்டார் என பார்வதி நாயர் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் பார்வதி நாயரின் வீட்டிற்கு நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் வந்து செல்வதை நான் பார்த்து விட்டேன். பார்வதி நாயரை வேவு பார்ப்பதற்காக தயாரிப்பாளர் ஒருவர் என்னை அனுப்பி வைத்ததாக அவருக்கு சந்தேகம். எனவே தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து என்னை தாக்கினார் என செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனையடுத்து, மது விருந்தில் ஆண் நண்பர்களுடன் நடந்த சில விஷயங்களை நான் பார்த்து விட்டேன். நான் பார்த்ததை பார்வதியும் பார்த்து விட்டார். இங்கு நடந்ததை வெளியில் சொல்லக்கூடாது என முதலில் மிரட்டினார். பின்னர் என் மீது திருட்டுப்பழி சுமத்தி போலீசில் பொய் புகார் அளித்து விட்டார்.என கூறினார்.