வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணை யார் என்று தெரியாத மர்ம நபர் கோடாரியால் துரத்திய சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், கொர்லகுண்டாவை சேர்ந்த விமலா திங்கட்கிழமை மாலை 6 மணி அளவில் குழந்தையை கையில் வைத்து வீட்டின் வாசலில் மற்றொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று வந்த மர்ம நபர் அவரை கோடாரியால் தாக்க தொடங்கினார். விமலா அங்கிருந்து பயந்து ஓடினாள். தனக்கும் குழந்தைக்கும் எந்தவிதமான அடியும் படக்கூடாது என வீட்டுக்குள் ஓடினார். ஆனால் அந்த மர்ம மனிதன் விடாமல் பின் தொடர்ந்து தாக்கினார். இதன் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து கூடியதால் குற்றவாளி தப்பி ஓடினார்.
இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த அதை ஆய்வு செய்த போது அதே பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர் விமலாவுக்கு ஏற்கனவே பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதால், அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராகுல் நிர்பயா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு ஜாமீனில் வந்த ராகுல் அந்த பெண்ணை பழி வாங்குவதற்காக கோடாரியால் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ராகுலை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.