எகிப்து நாட்டில் அலெக்சாண்ட்ரியா பகுதியில்உள்ள டபோசிரிஸ் மேக்னா கோவிலில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 2000 வருட பழமையான தங்க நாக்கை கொண்ட மம்மி கண்டுபிடிக்கப்பட்டது.
எகிப்து மற்றும் டொமினிகன் குடியரசு நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் எகிப்தில் பத்து வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் 16 புதிய இடங்களை கண்டறிந்து உள்ளன. இந்த புதிய இடங்களில் பல மம்மிகள் புதைக்கப்பட்டுள்ளது, மார்பில் அணிகலன் மற்றும் தலையில் வைத்த கிரீடத்துடன் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் அவை சரியான முறையில் பதப்படுத்தப்பட்டவில்லை. அதிலும் ஒரு மாமியின் வாயில் தங்க நாக்குஇருந்ததை கண்ட ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்தனர்.
எகிப்து நாட்டு மக்கள் இறந்தபின் ஒசிரிஸ் என்ற எகிப்து கடவுளுடன் உரையாடுவார்கள் என்று நம்பப்பட்டது. ஒசிரிஸ் எகிப்து நாட்டின் பாதாள உலகின் ஆட்சியாளர் என கூறப்பட்டது. இந்நிலையில் இறந்தபின்னும் அவருடன் பேசுவதற்கு அந்நாட்டு மக்கள் இந்த மாதிரியான தங்க நாக்குகளை வாய்க்குள் வைத்து புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.