Categories
தேசிய செய்திகள்

“முட்டைக் குழம்புடன் ரூ.5-க்கு சாப்பாடு”… மம்தாவின் புதிய திட்டம்..!!!

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருவதை ஒட்டி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க மம்தா பானர்ஜி முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார் . அதே சமயம் அவருக்கு கடும் சவாலாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் விதமாக ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டதை  மாநில முதல்வர் மம்தா பானர்ஜி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். ஐந்து ரூபாய்க்கு அரிசி சாதம், பருப்பு, காய்கறி மற்றும் முட்டை கறி கிடைக்கும் என்றும், ஒரு பிளேட் சாப்பாட்டிற்கு மத்திய அரசு 15 ரூபாய் மானியமாக வழங்கும் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

சுய உதவிக் குழுக்களால் மதியம் 1 முதல் 3 மணி வரை இந்த உணவு கூடம் இயங்குவதாகவும் படிப்படியாக மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |