ராஜஸ்தான் மாநிலத்தில் மாமனாருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் பகுதியில் ஹீராலால் என்பவர் தனது மனைவி மற்றும் தந்தை முகேஷ் குமார் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர் அதிக அளவு குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் எங்கு வேலைக்கு எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதை அறிந்த மாமனார் மருமகளுடன் நெருங்கி பழகியுள்ளார். இதையடுத்து இருவரும் கள்ள உறவில் ஈடுபட்டு வந்தனர். ஒருகட்டத்தில் இந்த சம்பவம் கணவனுக்கு தெரிய வரும் நிலையில் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
ஆனால் தந்தை மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து கணவனை கொலை செய்ய முடிவு செய்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துவிட்டு அருகில் உள்ள தோட்டத்தில் உடலை அடக்கம் செய்துவிட்டனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் அவரின் சகோதரருக்கு சந்தேகம் வரவே காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மனைவி மற்றும் தந்தையிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செய்த தவறை ஒப்புக் கொண்டனர். பின்னர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.