Categories
மாநில செய்திகள்

நாளை முதல் முழு ஊரடங்கு… சரக்குகளை வாங்கி குவிக்கும் குடிமகன்கள்..!!

இன்று இரவு 12 மணி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு ராக்கெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. நாள்தோறும் தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், சென்னையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களிலும் தொற்று பரவல் அதிக அளவில் உள்ளது.

இதன் காரணமாக தமிழக அரசு, இன்று இரவு 12 மணி முதல் ஜூன் 30ஆம் தேதிவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டும் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.

crowd

இதனால், குறிப்பிடப்பட்ட 4 மாவட்டங்களில் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படும் அச்சத்தால் மதுக்கடைகளுக்கு முன்பு மது வாங்க மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். மேலும், மதுபிரியர்கள் லாக் டவுன் முடியும் வரை தேவைக்கேற்ப சரக்குகளை அதிகளவில் வாங்கி பைகளில் அடைத்து வருகின்றனர்.. இந்த நெருக்கடியான சமயத்தை பயன்படுத்தி மதுபானங்களை அதிக விலைக்கு விற்பதாகவும், மதுப்பிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கொரோனா தொற்று அதிகம் பரவும் இந்நேரத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மது பாட்டில்கள் வாங்குவதற்கு ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு சென்றதால், மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினர் கும்பலாக குவியும் மதுப்பிரியர்களை லத்தியால் அடித்தும் விரட்டி வருகின்றனர்.

Categories

Tech |