இந்தியா இஸ்ரேலுக்கு இடையே உள்ள ராணுவ ஒத்துழைப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் பற்றி அந்நாட்டு ராணுவ மந்திரியுடன் தொலைபேசியில் ஆலோசித்ததாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சீன ராணுவத்துடன் தோன்றிய மோதல் விளைவாக லடாக் எல்லை பகுதியில் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று இஸ்ரேல் ராணுவ மந்திரியுடன் தொலைபேசி மூலம் பேசினார். இதுபற்றி ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் பற்றி, அந்த நாட்டு ராணுவ மந்திரி பென்னி கன்ட்சுடன் தொலைபேசியில் பேசினேன்.
அதுமட்டுமில்லாமல் கொரோனா பரவல் நிலைமை குறித்தும், அதை கட்டுப்படுத்த இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் நாங்கள் ஆலோசித்தோம்” என்று அவர் கூறினார்.