குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து பெயர் பெற்றவர் நடிகை மீனா. இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே தனி இடம் உண்டு.
தற்போது பல குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மீனா சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இவரது மகள் நைனிகா விஜய் நடிப்பில் உருவான தெறி படத்தில் தன்னுடைய மழலை நடிப்பால் அனைவரையும் கவர்ந்து சிறந்த பெயர் பெற்றவர்.
ஆனால் மீனாவின் கணவர் குறித்து பெரும்பாலும் நமக்கு தெரியாது. அவரைப் பார்த்து இருக்கவும் வாய்ப்பில்லை. தற்போது மீனா அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து எடுத்த குடும்ப புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.