தமிழகத்தில் ஊரடஙகை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் முதல்வருடன் ஆலோசைத்த மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் உடன் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டது. ஆலோசனை முடிவில் பல்வேறு விதமான பரிந்துரைகளை மருத்துவ நிபுணர் குழு தமிழக அரசு அளித்தது. அதனடிப்படையில் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று என்பது மிகவும் அதிகரித்து இருப்பதாகவும், குறிப்பாக ஊரடங்கு தளர்வை படிப்படியாகத்தான் பண்ண முடியுமே தவிர, ஒரே நேரத்தில் தளர்த்த முடியாது என்ற ஒரு விஷயத்தையும் பரிந்துரையாக தமிழக அரசுக்கு கொடுத்துள்ளது.
மேலும் தனிமனித இடைவெளி என்பது கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற ஒரு விஷயத்தையும் தமிழக அரசுக்கு மருத்துவ குழுவினர் சொல்லியுள்ளார்கள். பரிசோதனையை அதிகரித்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவியுள்ளதை அதிக அளவில் கண்டுபிடிக்க முடிந்தது என்றும் மருத்துவ குழுவினர் தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் கொரோனா வைரஸ் என்பது உடனடியாக நீங்கி விடாது. இதை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மிக அதிக நாட்கள் தேவைப்படும் என்ற விஷயத்தையும் தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழுவினர் தற்போது இந்த ஆலோசனையை தெரிவித்திருக்கிறார்கள். மருத்துவ குழுவின் இந்த பரிந்துரையில் மிக முக்கியமானது.
ஒருவேளை ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் அதிகமாக கூட கூடிய எந்த நிகழ்ச்சிக்கும் அரசுக்கு அனுமதி கொடுக்க கூடாது என்ற ஒரு பரிந்துரையை மருத்துவ குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். மருத்துவக்குழுவினரின் பரிந்துரையை வைத்து பார்த்தோமானால் ஊரடங்கு தளர்வு என்பது நிச்சயம் இருக்கும் ஆனாலும் பல கட்டுப்பாடுகள் தொடரும் என்பதையே மருத்துவ குழுவினரின் பரிந்துரை உணர்த்துகின்றது