Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் கொரோனா நிவாரணம் : இஸ்ரோ ரூ 5 கோடி நிதி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ 5 கோடிக்கும் மேல் நிதியுதவியளிக்க உள்ளதாக இஸ்ரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி கொத்து கொத்தாக மக்களை கொன்று குவித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு நாட்டு மக்கள் தங்களால் இயன்ற நிதியளிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். பிரதமரின் வேண்டுகோளின் படி, நிவாரண நிதிக்கு திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், பெரிய பெரிய கம்பெனிகள் பல தொடர்ந்து  நிதியுதவியளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்கு இஸ்ரோ நிறுவனம் சார்பில் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ 5 கோடிக்கும் மேல் நிதியுதவியளிக்க உள்ளதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |