ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறையை லண்டன் விமான நிலையம் அமல்படுத்தி வருகிறது.
லண்டனில் இருக்கும் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒரு மணிநேரத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் என கூறப்படுகின்றது. உமிழ்நீர் சோதனையின் அடிப்படையில் இந்த நடைமுறையிலான பரிசோதனை 102 பவுண்ட் க்கும் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது.
பிரிட்டன் அரசு மேற்கொள்ளும் தேசிய சுகாதார சேவையை விட ஹீத்ரோ சோதனையின் முடிவுகள் விரைவாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங், இத்தாலியில் பயணிகள் புறப்படும் முன்பு எதிர்மறையான பரிசோதனைக்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என தனது அறிக்கையில் விமான நிறுவனம் கூறியுள்ளது. கடந்த வாரம் பிரிட்டன் இத்தாலியை பயணப்பாதை பட்டியலில் இருந்து நீக்கியது.
அதாவது பிரிட்டனுக்குள் இத்தாலியில் இருந்து வரும் பயணிகள் நுழைந்தால் அவர்கள் நிச்சயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் சான் மரினோ, இத்தாலி போன்ற இடங்களில் இருந்து வருபவர்கள் பிரிட்டனுக்கு வரும்போது சுயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஐரோப்பாவில் தாக்கத் தொடங்கி மக்களின் அன்றாட வாழ்க்கை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.