Categories
தேசிய செய்திகள் வானிலை

18 மணி நேரத்திற்குள்…… கரையை கடக்கும் மஹா புயல்…… தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு….!!

அதிதீவிர புயலாக மாறியுள்ள மஹா புயல் நாளை குஜாத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவான மகா புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்து போர் பந்தலுக்கு தென்மேற்கு பகுதியில் 650 கிலோ மீட்டர் தொலைவில்நிலை கொண்டுள்ளது. இந்த புயல் குஜராத்தில் போர்பந்தர் டையூர் இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்பு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் குறைவான மித வேகத்தில் புயல் கரையை கடக்க கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. புயல் கரையை கடக்கும் பொழுது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும்,

Image result for மஹா புயல்

அப்பொழுது கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சூரத், அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதை போல், கரையை கடக்கும் முன்பே புயல் வலுவிழக்க வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பிடபட்டிருக்கிறது. இருந்தபோதிலும் சேதங்களை தவிர்ப்பதற்காக மாநில அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 6 தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழுக்கள் அகமதாபாத் சென்றடைந்துள்ளனர். அதிக தாக்கத்திற்கு உள்ளாக கூடியவை என்று கணிக்கப்பட்டு உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

Categories

Tech |