Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

AlertNews: 48 மணி நேரத்திற்குள்….. ப்ளீஸ் எச்சரிக்கையா இருங்கள் …!!

வருகின்ற 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் 29ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா பகுதிக்கு செல்கிறதா ? அல்லது தமிழக பகுதிக்கு வருமா ? அல்லது வடக்கு நோக்கி நகர்ந்து பங்களதேஸ் பகுதிக்கு செல்லுமா ? என்று தெளிவான தகவல் கொடுக்கவில்லை.

இன்னும் ஓரிரு நாட்களுக்குப் பிறகு அதனுடைய பாதை எப்படி இருக்கிறது ? நம்மளை நோக்கி வருமா அல்லது வடக்கு நோக்கி போகுமா ? என வானிலை அறிவிக்கும். இதனால் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தின் கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் இரண்டு நாட்கள் கடலுக்குள் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |