திருப்பூர் மாவட்டம் சிறுகூடல்பட்டியில் வசிப்பவர் பஞ்சலிங்கம் என்பவரின் மகன் விக்னேஷ் குமார் (31). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து அவருக்கும் வைஷ்ணவி என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதியன்று உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பஞ்சலிங்கம் தன்னுடைய மனைவியிடம் வந்து விக்னேஸ்வரன் எங்கே என்று கேட்டுள்ளார்? அதற்கு அவர் குளிக்க சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். ஆனால் விக்னேஷ் வெகுநேரமாகியும் வராததால் பஞ்சலிங்கம் குளியலறைக்குச் சென்று பார்த்துள்ளார்.
அங்கு அவர் தூக்கிட்டு தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பஞ்சலிங்கம் தனியார் மருத்துவமனைக்கு விக்னேஷை கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதால் விக்னேஷின் பெற்றோ மற்றும் மனைவி ஆகியோர் கதறி அழுதுள்ளனர். மேலும் காவல்துறையினர் இதற்கான காரணமா என்ன? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.