Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கண்முன்னே….. கணவனை திட்டிய நாத்தனார்…… விரக்தியில் குழந்தைகளுடன் மனைவி தற்கொலை….. திருவள்ளூர் அருகே சோகம்….!!

திருவள்ளூர் அருகே ஏற்பட்ட குடும்ப தகராறில் இளம்பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த சேக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துமாரி. இவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி இவர்கள் இருவரும் நான்கு வருடங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கவியரசன் என்கின்ற இரண்டு வயது மகனும், ரிஷ்வன் என்ற மூன்று மாத குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் முத்துமாரி சில நாட்களாக சரிவர வேலைக்கு செல்லாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாங்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டை பூட்டிவிட்டு கடந்த ஒரு வாரமாக அதே பகுதியில் வசித்து வரும் தனது தாய் வீட்டில் முத்துமாரி குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். அங்கு அவரது தங்கைக்கும், இவருக்கும்  இடையே சண்டை ஏற்பட அவரது தங்கை முத்துமாரியை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துமாரியின் மனைவி அவரை நமது வீட்டிற்கு செல்லலாம் வாங்க என்று அழைத்த போதிலும், முத்துமாரி வராமல் தாய் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த விஜயலட்சுமி தனது இரண்டு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின் சிறிது நேரம் கழித்து வாடகை வீட்டிற்கு சென்று முத்து பார்த்த போது அங்கும் கதவு பூட்டி இருந்ததால் எங்கு சென்று இருப்பார்கள் என்ற அச்சத்தில் சிறிதுநேரம் தேடி விட்டு பின் ஆவடி காவல் நிலையத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் காணாமல் போய் விட்டதாக புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வர,

ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 3 சடலம் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் அவர்கள் இந்து கல்லூரியை அடுத்த ரயில்வே தண்டவாளம் அருகே சென்று சோதனையிட்டனர். அங்கு கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததில்,

  அது காணாமல் போன விஜயலட்சுமி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் என்பதை கண்டுபிடித்தனர். குடும்ப சண்டையில் ஏற்பட்ட விரக்தியில் அவர் தனது குழந்தைகளுடன் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் ஒருபுறம் விசாரணை மேற்கொண்டு வர, மறுபுறம் திருவள்ளூர் ஆர்டிஓ இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |