சென்னையை விட்டு இபாஸ் இல்லாமல் வெளியேறினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 5-வது கட்ட ஊரடங்கு அமல் படுத்த பட்ட சமயத்தில், பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த தளர்வுகளுக்கு பின் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கியது.
இதனால் மீண்டும் தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல் படுத்தப்படவிட்டாலும், பரவாயில்லை. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் அமல்படுத்துமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, இன்று காலை 11 மணிக்கு மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கும் பொது ஊரடங்கு உத்தரவை முதல்வர் பிறப்பித்தார்.
பொதுமக்கள் ஊராடங்கை சமாளிப்பதற்காக ஒவ்வொரு குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும் எனவும், நலவாரிய அமைப்பு சார்ந்த, சாராத நலவாரிய அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையிலிருந்து தங்களது சொந்த மாவட்டத்தில் உள்ள பிற பகுதிகளுக்கும் மக்கள் செல்ல வேண்டுமெனில், உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து அவை சரி தானா என பரிசோதிக்கப்பட்ட பின்பு தான் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் , விதிமுறைகளை மீறி செல்ல முற்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.