Categories
தேசிய செய்திகள்

டிரைவிங் டெஸ்ட் இல்லாமல்…. இனி ஈஸியா லைசென்ஸ் வாங்கலாம்…. வெளியான அறிக்கை…!!

பயிற்சி மையங்களுக்கு புதிய நடைமுறைகளை கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.

நாம் டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதற்கு ஏதேனும் வாகனப் பயிற்சிப் பள்ளி அல்லது வாகனப்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று குறிப்பிட்ட நாட்களுக்கு ஓட்டுநர் பயிற்சி எடுத்துவிட்டு அதன் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்போம். இதையடுத்து முதலில் LLR பதிவுசெய்ததையடுத்து வாகனப் பயிற்சிக்குப் பிறகு, RTO அலுவலர் முன்பாக வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும். அதன் பின்னர் தான் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். இதில் நீண்ட காலம் எடுக்கிறது.

இந்நிலையில் ஓட்டுனர் பயிற்சி மையங்களுக்கு அங்கீகாரம் தொடர்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பயிற்சி மையங்களுக்கு புதிய நடைமுறைகளை கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது. இந்த மையங்களில் பயிற்சியை முடிக்கும் ஓட்டுநர்களுக்கு பயிற்சியை முடிக்கும் போது ஓட்டுநர் பரிசோதனையில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பணத்தை மட்டும் கொடுத்து லைசென்ஸ் வாங்கிக்கொள்ளலாம்.

Categories

Tech |