உலகம் முழுக்க கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதையடுத்து கொரோனா இடைவெளி இல்லாது இருந்தால் 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த டி20 உலக கோப்பையில் விளையாடியிருப்பார் என முன்னாள் இந்திய தேர்வாளர் சரந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.