திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு அதிமுகவில் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து ஒன்றிய அரசாங்கம் சொல்வதை அத்தனை விஷயங்களையும் ஆமா, ஆமா என்று ஆட்சியில் இருந்தபொழுதும் தலையாட்டிக் கொண்டிருந்தீர்கள். ஆட்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர்கள் வழியிலே போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
விவசாயிகளுக்கு எதிராக.. தமிழ்நாட்டுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க உங்களுக்கு துணிவு இல்லை. விவசாயிகளோடு நிற்க மறுக்க கூடியவர்கள். விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த சட்டத்தை ஆதரிக்க கூடியவர்களாக இங்கே இருக்கக்கூடிய அதிமுக திமுகவை பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது. மறுபடியும் மக்கள் உங்களுக்கு சரியான பாடத்தை விரைவில் கொடுக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் சொல்லித் தருவார்கள்.
பொருளாதாரத்தைப் பற்றி ஒன்றிய அரசாங்கத்தினுடைய நிதி அமைச்சரிடம் கேள்வி கேட்கும் பொழுது, வெங்காயம் விலை ஏறிவிட்டது என்று கேள்வி கேட்டால் ? அமைச்சர் சொல்லக்கூடிய பதில், எங்க வீட்டில் வெங்காயம் – பூண்டு எல்லாம் சாப்பிடுவது இல்லை. சில நாட்களுக்கு முன்னதாக பதில் சொல்லுகிறார்கள்… நான் வெங்காயம் சாப்பிட பழக்கம் இல்லை. ஆனாலும் வெங்காயம் சாப்பிட கூடியவர்களை பாதுகாக்கக்கூடிய இடத்திலே நான் இருக்கிறேன் என்று சொல்கிறார்.
நீங்க பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். இந்திய ரூபாய் மதிப்பு கீழே இறங்கிக் கொண்டே இருக்கிறதே… அமெரிக்கா டாலர் மதிப்பு ஏறிக்கொண்டே இருக்கிறதே என கேள்வி கேட்டால், அதற்கு நம்முடைய நிதி அமைச்சர் தரக்கூடிய பதில், நம்முடைய பணம் இறங்கவில்லை. ஆனால் அமெரிக்க டாலர் மதிப்பு ஏறிக்கொண்டே போகிறது என சொல்கிறார்.
அமெரிக்காவின் டாலரின் மதிப்பு ஏறிக்கொண்டே போகிறது. இந்தியாவுடைய பண மதிப்பு எற வில்லை என்றால், வெளிநாட்டில் இருந்து ஏதாவது வாங்க வேண்டும் என்றால் யாருக்கு நஷ்டம் ? இந்தியர்களுக்கு நஷ்டம். பெட்ரோல் வாங்குகிறோம் என்றால் ? இந்தியருக்கு நஷ்டம். அந்த விலை, அந்த பளு, அந்த சுமை நம் மீது சுமத்தப்படுகிறது.