விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஜவுளிக்கடை திறந்ததால் தாசில்தார் தலைமையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 7ஆம் தேதி முதல் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்க அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில் ஜவுளிக்கடைகள் போன்றவற்றிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள மெயின் பஜாரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஜவுளி கடை திறந்துள்ளதாக தாசில்தாருக்கு புகார் வந்துள்ளது.
அந்த புகாரின் அடிப்படையில் தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு திறந்து வைத்திருந்த ஜவுளி கடையை மூடி சீல் வாய்த்த அதிகாரிகள், விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.