Categories
தேனி மாவட்ட செய்திகள்

முகக்கவசம் ஏதும் அணியாமல்… அடுத்தடுத்து 5 ஆர்ப்பாட்டம்… ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து 5 ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அடுத்தது 5 போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தேமுதிக கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தங்கியுள்ளார்.

இதனையடுத்து வடவீரநாயக்கன்பட்டியில் இருக்கும் குடிசை மாற்று வரிய குடியிருப்பில் தமிழர் தொல்குடியான குறவர் இன மக்களுக்கு அதிக அளவில் குடுயிருப்புகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வனவேங்கைகள் கட்சியினர் சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் உலகநாதன் தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சாதிய வன்மத்தில் செயல்படுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தர்மர் தலைமை தங்கியுள்ளார்.

மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆதி தமிழர் கட்சியினரும் செயலாளர் விஷவைக்குமார் தலைமையில் போராட்டம் நடத்தியுள்ளனர். அதே போல் சீர்மரபினர் நலச்சங்கம் சார்பிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலரும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |