80 வயது முதியவர் ஒருவர் 29 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா நாட்டின் கேப்டன் நகரத்தில் வசிக்கும் 29 வயதாகும் இளம்பெண்ணின் பெயர் டெர்சல் ராஸ்மஸ். சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டு உள்ளூர் பத்திரிகையில் வேலை செய்து வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு உள்ளூர் செய்தித்தாள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டெர்சல் ராஸ்மஸ் சென்றபோது, 80 வயதான வில்சன் ராஸ்மஸ் என்ற முதியவரை சந்தித்துள்ளார். எப்படியோ இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
80 வயது நபர் மீது 29 வயது பெண்ணிற்கு காதலா என்பதை கேட்பதற்கு ஷாக் ஆகத்தான் இருக்கும். காதலுக்கு கண், காது, மூக்கு எதுவும் இல்லை என்றால், வயதைத் தாண்டி இருவருக்குமிடையே ஏதோ ஒரு இடத்தில் மனமொத்து போயிருக்கிறது. இதையடுத்து டெர்சலும் வில்சனும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். ஒத்த வயது உடையவர்கள் காதலித்தாலே பல பிரச்சனைகள் வரும். சில நேரங்களில் அவர்களே அவர்களுக்கு பிரச்சினை ஆகிவிடுவார்கள்.
இவ்வளவு வயது வித்தியாசம் இருந்தாலும் எப்படி திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என்று இந்த ஜோடி முடிவு எடுத்தது, இருவரும் சென்று தன் தாயிடம் தங்கள் காதல் விவகாரத்தை சொல்லவே இதைக் கேட்டு அவர் கோபம் அடைந்தார். அப்போதுதான் ரியாக்ஷனை கொஞ்சம் நாம் கற்பனை செய்தால் எப்படி இருக்கும். ஏனெனில் டெர்சலின் தாயை விடவும் வில்சன் சுமார் 24 வருடங்கள் மூத்தவராவார்.
அந்த தாய்க்கு காதல் ஜோடி இருவரும் காதலுக்கு வயதில்லை என்பதை புரியவைத்து திருமணத்துக்கு ஒப்புக் கொண்டனர். இதையடுத்து சமீபத்தில் டெர்சலும் வில்சனும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமண போட்டோ தான் தற்போது வைரல் ஆகி வருகின்றது. வில்சன் 56 வயதான மூத்த மகள் தான் இருவரின் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்துப் போட்டுள்ளார். இந்த திருமண ஜோடி தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் வாழ்ந்து வருகின்றனர்.