Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WIvIND : இன்று கடைசி போட்டி…. “வலுவாக இருக்கும் IND”….. வெல்லுமா வெஸ்ட் இண்டீஸ்?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நான்காவது டி20 நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரிசப் பண்ட் 44 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்களும் குவித்தனர். பின்னர் 192 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக தொடங்கினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கடைசி மற்றும் 5 ஆவது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.  இந்த கடைசி போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்க இருக்கிறது.. அதே நேரத்தில் இந்த போட்டியிலும்  வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடிக்க வேண்டும் என்று இந்திய அணி களமிறங்கும் என்பதால் இன்றைய போட்டியில்  விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது..

Categories

Tech |