Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WIvIND : சூர்ய குமார் அதிரடியில்…. 2ஆவது வெற்றியை பதிவு செய்த இந்தியா…!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 165 என்ற இலக்கை எட்டியது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி 3-3 என்று  முழுமையாக கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டி முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது.

இந்தநிலையில், இன்று மூன்றாவது டி20 போட்டி வார்னர் பார்க்கில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 50 பந்துகள் 73 ரன்கள் (8 பவுண்டரி 4 சிக்ஸர் ) எடுத்தார்.. இந்திய அணியில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், பாண்டியா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சூர்ய குமார் யாதவும் களமிறங்கினர்.. சூர்ய குமார் யாதவ் தொடக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினார்.. இவர் ஒருபுறம் அதிரடியாக ஆட மறுபுறம் கேப்டன் ஹிட் மேனும் (11 ரன்கள்) 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்து அதிரடியாக ஆட தொடங்கிய நிலையில் முதுகுவலி காரணமாக ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

அதன்பின் ஷ்ரேயஸ் அய்யரும், சூரியகுமார் யாதவும் ஜோடி சேர்ந்தனர்.. ஷ்ரேயஸ் தட்டி கொடுக்க பந்துகளை பறக்கவிட்டார் யாதவ்.. இதனால் இந்திய அணி 11ஆவது ஓவரில் 100 ரன்களை கடந்தது. அதன்பின் 24 ரன்னில் ஆட்டமிழந்தார் ஷ்ரேயஸ்.. அதன் பின் பண்ட் இறங்கி அவர் பங்கிற்கு அதிரடி காட்டினார்.. இதனையடுத்து அதிரடியாக ஆடி வந்த சூர்ய குமார் 44 பந்துகள் 76 ரன்களில் (8 பவுண்டரி, 4 சிக்ஸர்) டோமினிக் டிராக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பின் களமிறங்கிய பாண்டியா 4 ரன்னில் வெளியேறினாலும் இறுதியில் 19ஆவது ஓவர் முடிவில் பவுண்டரியுடன் முடித்து வைத்தார் பண்ட்.. இந்திய அணி 19ஆவது ஓவரில் 3 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்து வென்றது. பண்ட் 33 ரன்களுடனும், தீபக் ஹூடா 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

Categories

Tech |