பிரான்ஸ் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவிலிருந்து சுமார் 9 ஓநாய்கள் தப்பியோடியதால், அதிகாரிகள் அந்த பூங்காவை தற்காலிகமாக அடைத்திருக்கிறார்கள்.
பிரான்ஸ் நாட்டில் இருக்கும் Montredon-Labessonnie-ல் Trois Vallees என்ற உயிரியல் பூங்கா அமைந்திருக்கிறது. அங்கிருந்து சில ஓநாய்கள் தப்பிவிட்டன. அப்பூங்காவில், பார்வையாளர்களுக்கான நேரத்தில், ஓநாய்கள் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து, வேலியை தாண்டி தப்பித்திருக்கிறது. எனினும், பூங்காவிலிருந்து அவை வெளியேறவில்லை.
இந்நிலையில், தப்பித்த அந்த ஓநாய்களில் கொடூரமாக நடந்துக்கொண்ட ஓநாயை சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், பாதுகாப்புகள் பலப்படுத்தப்படும் வரை அந்த உயிரியல் பூங்கா அடைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.