சவுதி அரேபியாவில் அரசாங்கத்தை எதிர்த்து ட்விட்டரில் கருத்து வெளியிட்ட பெண் ஒருவருக்கு 34 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
சவுதி அரேபியாவை சேர்ந்த சல்மா அல் செஹாப் என்ற பெண் அந்நாட்டின் அரசாங்கத்திற்கு எதிரான தகவல்களை ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்திருக்கிறார். எனவே, ட்விட்டர் தளத்தின் மூலமாக சமூகத்தில் பதற்றம் உண்டாக்க முயல்கிறார் என்று அவர் மீது அரசாங்கம் வழக்கு பதிவு செய்தது.
எனவே, நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு பின் அந்த பெண்ணிற்கு 34 வருடங்கள் சிறை தண்டனை விதித்திருக்கிறது.