Categories
உலக செய்திகள்

“குழந்தைகளை கடத்தி சென்ற தாய்!”…. பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்…!!

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு பெண் மீது பாரீஸ் நீதிமன்றத்தில் சர்வதேச பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 39 வயது நபர் Vincent Fichot, டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்த சமயத்தில், மைதானத்திற்கு அருகே உண்ணாவிரதம் இருந்து அதிக மக்களின்  கவனத்தை ஈர்த்தவர். இவரின் மனைவி ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், அந்த பெண், தன் கணவரிடமிருந்து இரு பிள்ளைகளையும் எங்கோ கடத்தி சென்றுவிட்டார். இதனால், Vincent- குழந்தைகளை பார்க்க முடியவில்லை. எனவே, அவர் ஜப்பான் நாட்டின் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். எனினும் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது ஒரு பாரிஸ் நீதிமன்றத்தில் அந்தப் பெண்ணிற்கு சர்வதேச பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |