Categories
உலக செய்திகள்

“இது என்ன புதுசா இருக்கு…!” இதற்கெல்லாமா அடிமையாவார்கள்….? 12-வது திருமணத்திற்கு தயாரான பெண்…!!

அமெரிக்காவில் ஒரு பெண் திருமணத்திற்கு அடிமையாகி தற்போது வரை 11 நபர்களை திருமணம் செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழக்கத்திற்கு அடிமையாவார்கள். ஆனால், திருமணத்திற்கு ஒருவர் அடிமையாவது உண்மையில் கேள்விப்படாத ஒன்றாகவும், புதிதாகவும் இருக்கிறது.  அந்த வகையில், ஆச்சரியமளிக்கும் விதமாக அமெரிக்காவில் உள்ள Utah என்ற பகுதியில் வசிக்கும் Monette Dias என்ற 52 வயது பெண், தற்போது வரை சுமார் 11 நபர்களை திருமணம் செய்திருக்கிறார்.

மேலும், 12 ஆவது தடவையாக திருமணம் செய்ய, தனக்கு ஏற்ற துணையை கண்டுபிடித்திருக்கிறார். இவர், அண்மையில், “Addicted To Marriage” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், தன் அசாதாரணமான பழக்கம் பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

மேலும் தன்னை, “Boy Crazy” என்று அவர் குறிப்பிடுகிறார். மேலும், தனக்கு முதல் ஈர்ப்பு ஏற்பட தொடங்கியதிலிருந்து தற்போது வரை இவ்வாறு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பல தடவை, தான் திருமணம் செய்து கொண்டதற்கு என்ன காரணம்? என்பது பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

மேலும், நான் விரைவில் காதலித்து விடுகிறேன். தற்போது வரை 28 நபர்கள் என்னை காதலிப்பதாக கூறியிருக்கிறார்கள். என் திருமணத்தை பற்றியும், கணவரை பற்றியும் எந்த நேரமும் கற்பனை செய்து கொண்டிருப்பேன். திருமணத்திற்கு பின் அந்த நபர் என்னை கவரவில்லை எனில், என் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக வேறு ஒருவரை தேட வேண்டிய நிலை உண்டாகிறது.

மேலும், சிறுவயதிலிருந்தே திருமணம் செய்யாமல் ஒருவருடன் உறவு வைத்துக் கொள்வது தவறானது என்று தன் மத நம்பிக்கையில் கூறப்படுவதால், வேறு ஒருவரை தேடி திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது, ஜான் என்ற 57 வயது நபரை 12ஆம் முறையாக திருமணம் செய்ய தயாராகியுள்ளார்.

Categories

Tech |