கடலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்துள்ளார். கடந்த 30ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். இவருக்கு சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனா பரிசோதனை செய்த நிலையில் இன்னும் முடிவு வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 124ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 100க்கு மேற்பட்டோருக்கு பல்வேறு மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு ஏற்கனவே ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் கடலூரில் தற்போது ஒரு பெண் உயிரிழந்துள்ளார். எனினும் இவரது பரிசோதனை முடிவுகள் வெளியாகாததால் இவர் கொரோனா வைரஸால் தான் உயிரிழந்தாரா? என உடற்கூராய்வில் தான் தெரியவரும்.