Categories
உலக செய்திகள்

பாரீஸ் புறநகர் பகுதியில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல்.. பூச்சி மருந்து தெளிக்கும் பணி தீவிரம்..

பாரீஸின் ஒரு புறநகர் பகுதியில் பெண் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதையடுத்து, கொசுவை ஒழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Alfortville என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது, அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. எனவே, அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த மக்களுக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு வீதிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, டெங்கு காய்ச்சல் ஏழு நாட்களில் குணமாகிவிடும். ஆனால், சிலர் உயிரிழக்க வாய்ப்புகள் உள்ளது. இதனிடையே உள்ளூர் சுகாதார அலுவலகத்தின் கிளை அலுவலகமானது, Alfortville என்ற பகுதியில், மேலும் ஐந்து நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளது .

இதனையடுத்து, கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு மக்கள் தங்கள் வீடுகளில், ஜன்னல்களை இரவு நேரத்தில் அடைத்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |