Categories
உலக செய்திகள்

திரைப்படப்பாணியில் ஒரு சம்பவம்.. அதிகாரிகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய பெண் கைது..!!

அமெரிக்காவில் திரைப்படப்பாணியில் ட்ரக்கை திருடி சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் என்ற பகுதியில் ஒரு ட்ரக் நின்றுள்ளது. அப்போது திடீரென்று ஒரு பெண் அதனை திருடி ஒட்டி சென்றார். எனவே அதிர்ச்சியடைந்த உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பின்பு அதிகாரிகள் ஜிபிஎஸ் சமிக்கைகளை வைத்து பின்தொடர்ந்து சென்றனர்.

மேலும் உடனடியாக அப்பகுதியில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். எனவே அவர்கள் ட்ரக் வந்து கொண்டிருக்கும் பாதையில் பாதுகாப்பு தடுப்புகளை வைத்து நிறுத்தினார்கள். எனினும் அந்த பெண் தடுப்புகளில் மோதிக்கொண்டு அதிவேகத்தில் சென்று விட்டார்.

இது மட்டுமல்லாமல் சாலையில் நின்ற போலீசாரின் வாகனங்களை திரைப்பட பாணியில் மோதித் தள்ளி விட்டு பறந்துவிட்டார். அதிகாரிகளும் அந்த ரெக்கை பின் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தனர். அந்த பெண் அதிகமான வேகத்தில் சென்றதால் அவர் செல்லும் பாதையில் போக்குவரத்து தடை விதித்தனர்.

மேலும் சைரன் ஒலிகள் இல்லாமல் சத்தமின்றி பின்தொடர்ந்துள்ளார்கள். எனவே அந்த பெண் காவல்துறையினர் நம்மை தொடர்ந்து வரவில்லை என்று கருதி, ஒருவழிப் பாதையில் நுழைந்து  அப்பகுதியின் ஒரு உணவகத்தில் ட்ரக்கை நிறுத்தி சாப்பிட சென்றிருக்கிறார். உடனடியாக அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்தார்கள்.

அப்போதும் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். எனினும் அதிகாரிகள் அவரை பிடித்து கைது செய்துவிட்டார்கள். தற்போது அவரை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |