Categories
உலக செய்திகள்

பெண் செய்த செயல்.. அடுத்தடுத்து விழுந்த பந்தைய வீரர்கள்.. வழக்கு தொடர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள்..!!

பிரான்ஸில் மிகவும் பிரபலமான “Tour de France” என்ற மிதிவண்டி பந்தயத்தில் ஒரு இளம் பெண்ணால் பெரிய விபத்து ஏற்பட்டது.

பிரான்சில் நடத்தப்படும் இந்த மிதிவண்டி பந்தயத்தில் உலக நாடுகளில் இருந்து பல்வேறு வீரர்களும் பங்கேற்பார்கள். மிக தீவிரமாக நடந்து கொண்டிருந்த இந்த பந்தயத்தில் வீரர்கள் வெற்றி கோட்டையை அடைய சுமார் 30 மைல் தூரமே இருந்தது. அப்போது “கமான் தாத்தா பாட்டி” என்ற ஒரு அட்டையை வைத்திருந்த இளம்பெண் கேமரா தன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக சில அடிகள் முன்வந்துள்ளார்.

அவர், அதிவேகமாக வந்து கொண்டிருந்த வீரர்களை கவனிக்கவில்லை. அப்போது அவர் வைத்திருந்த அட்டை ஒரு வீரரின் சைக்கிளில் தட்டியது. வேகத்தில் வந்த அவர் தடுமாறி கீழே விழுந்தவுடன் அவரை தொடர்ந்து வந்த வீரர்களும் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து அந்த இடமே போர்க்களம் போல மாறியுள்ளது.

இதில் 21 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய அந்தப்பெண் மாயமாகிவிட்டார். அந்தப் பெண் நீல நிறத்தில் ஜீன்ஸ் மற்றும் மஞ்சள் நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தார். எனவே காவல்துறையினர் அந்த பெண்ணை தீவிரமாக தேடி வந்த போது  அவராகவே காவல்துறையினரிடம் சரணடைந்திருக்கிறார்.

அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர் மீது தெரிந்தே பாதுகாப்பு விதிமுறைகளை மீறி காயம் உண்டாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

அவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் 13,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் பந்தயத்தை ஒருங்கிணைத்தவர்கள் அந்தப் பெண் மீது வழக்கு தொடர தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |