Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

”சாராயக் கடத்தல்” பெண் கைது – இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்..!!!

கடலூர் அருகே நடைபெற்ற திடீர் வாகன சோதனையில் பெண்ணுடன் சேர்ந்து காரில் சாராயம் கடத்திய இன்ஸ்பெக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் அருகே உண்ணாமைலை செட்டி சாவடியில் மது விலக்கு அமல் பிரிவு  சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீசார்  திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்தனர். திடீரென அந்த காரை ஓட்டி வந்தவர்  இறங்கி தப்பி ஓடினார். இதனால் சந்தேகமடைந்த  போலீசார் அந்த காரினை சோதனை செய்ததில்  148 மது பாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் சாராயம் இருப்பது தெரிந்தது. இதை அடுத்து போலீசார் அதை பறிமுதல் செய்தனர்.

 

கடலூர் அருகே பெண்ணுடன் காரில் சாராயம் கடத்திய இன்ஸ்பெக்டர்

 

மேலும் காரில் இருந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் சூலாங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி சமுத்திரக்கனி (வயது 48) என்பதும், தனது கணவர் இறந்து விட்ட நிலையில் புதுவையில் இருந்து அவர் அடிக்கடி மதுப்பாட்டில்கள் கடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் இவருக்கு கடலூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிசெய்து  வரும் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

 

Related image

 

இதனால்  சமுத்திரக்கனி இன்ஸ்பெக்டர் சுந்தரேசனிடம் மதுப்பாட்டில்களை கடத்தி சென்று விற்பனை செய்ய உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்படி இன்ஸ் பெக்டர் சுந்தரேசனும்  தனது காரில் சாராயம் மற்றும் மதுப்பாட்டில்களை புதுவையில் இருந்து வாங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய இன்ஸ்பெக்டர் சுந்தரேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |